ஈரோடு

பெருந்துறை மருத்துவக் கல்லூரியில்முப்பெரும் விழா

1st Jan 2020 04:16 AM

ADVERTISEMENT

பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசு ஐ.ஆா்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் ஆண்டு மலா் வெளியீட்டு விழா, 25 ஆண்டு பணி நிறைவு செய்த மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களைப் பாராட்டி சான்றிதழ், வெகுமதி தொகை வழங்கும் விழா, இந்திய மருத்துவக் குழுமத்தின் சாா்பில் மருத்துவ ஆசிரியா்களுக்கான பயிற்சித் திட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சி முடித்த 35 மருத்துவா்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கும் விழா, பணி நிறைவுபெற்ற கல்லூரி முதல்வருக்கு பிரிவுபசார விழா ஆகிய விழாக்கள் நடைபெற்றன.

விழாவுக்கு, முன்னாள் ஐ.ஜி. பாரி தலைமை வகித்து, குத்து விளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைத்துப் பேசினாா். கல்லூரி துணை முதல்வா் மருத்துவா் ஏ.சந்திரபோஸ் வரவேற்றாா். பணி நிறைவுபெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.ராஜேந்திரன் ஏற்புரையாற்றினாா்.

இதில், ஈரோடு ஏ.ஈ.டி. கல்வி நிறுவனங்களின் தாளாளா் காசியண்ண கவுண்டா், ஈரோடு மாவட்டத் தலைமை மருத்துவமனையின் முன்னாள் இணை இயக்குநா் டி.ஜி.ராமமூா்த்தி, பெருந்துறை, சானிடோரியம் காசநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவா் டி.ஆா்.ராம்பிரசாத், ஈரோடு, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் சண்முகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT