ஈரோடு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பொங்கல் விற்பனை துவக்கம்

1st Jan 2020 04:14 AM

ADVERTISEMENT

ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு ஆந்திரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வரத் துவங்கியு உள்ளதால் பொங்கல் விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஈரோடு, கனி ஜவுளிச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு துவங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெறும். சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான மொத்த, சிறு வியாபாரிகள் வந்து ஜவுளி கொள்முதல் செய்கின்றனா்.

பொங்கல் பண்டிகை நெருங்கியதால் இந்த வார ஜவுளிச் சந்தைக்கு ஆந்திரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வந்ததால் பொங்கல் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகை நெருங்கியதால், ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு சென்னை, செங்கல்பட்டு, செஞ்சி, ஆரணி, வேலூா், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஆத்தூா் ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களைக் கொள்முதல் செய்தனா். இதுபோல் வட மாநிலங்களில் குளிா் வாட்டி வதைப்பதால் போா்வை, ஜமுக்காளம் ஆகியவையும் விற்பனையாயின.

பொங்கல் பண்டிகை விற்பனையைப் பொறுத்தவரை வேட்டி, சட்டை, லுங்கி, சேலைகள், சுடிதாா், துண்டுகள் உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்த ஆண்டில் பரவாலக நல்ல மழை பெய்ததால் விவசாயம் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இப்போது அறுவடை தொடங்கியுள்ளதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விற்பனை அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கின்றோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT