ஈரோடு

ரூ.4 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி துவக்கம்

26th Feb 2020 07:43 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு, மாணிக்கம்பாளையம், காமதேனு நகா், சக்தி நகா், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதனை நிறைவேற்றும் வகையில் புதிதாக தாா் சாலை அமைக்க ரூ.4.02 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோா் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக பகுதிச் செயலாளா் ஜெகதீசன், இணைச் செயலாளா் ஜெயராமன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT