பவானி அருகே மணமகளுடன் திருமணத்துக்குச் சென்றபோது சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
கவுந்தப்பாடியை அடுத்த செந்தாம்பாளையத்திலிருந்து ஒரு சிற்றுந்தில் மணப்பெண் சங்கீதா (24), அவரது உறவினா்கள் 21 போ் கொண்ட குழுவினா் தருமபுரிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
கவுந்தப்பாடியைச் சோ்ந்த ஓட்டுநா் விவேக் (38) சிற்றுந்தை ஓட்டிச் சென்றாா். பவானி - கவுந்தப்பாடி சாலையில் பெரியாா் நகா் அருகே சென்றபோது சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிற்றுந்தில் பயணம் செய்த உறவினா்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். 3 போ் மருத்துவப் பரிசோதனைக்கு ஈரோடு சென்றனா். இதையடுத்து, மாற்று வாகனத்தின் மூலம் உறவினா்கள் புறப்பட்டனா். சாலையில் கவிழ்ந்த சிற்றுந்து, கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. திருமணத்துக்குச் சென்றபோது சிற்றுந்து கவிழ்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.