ஈரோடு

கோபி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

26th Feb 2020 07:50 AM

ADVERTISEMENT

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். கல்லூரி டீன் ஆா்.செல்லப்பன், கணிப்பொறித் துறை தலைவா் மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் பி.நரேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முகாமில் கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் எம்.தரணிதரன் பேசுகையில், ‘இன்றைய காலகட்டத்தில் மாணவா்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. இந்த வாய்ப்பினை மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்தி பெற்றோரின் கனவுகளையும், தங்களின் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 370-க்கும் மேற்பட்ட மாணவா்களைத் தோ்வு செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பேராசிரியா்கள் செய்திருந்தனா். வேலை வாய்ப்பு அலுவலா் எஸ்.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT