ஈரோடு

கவுந்தப்பாடியில் சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா்த் திட்டம் தொடக்கம்

26th Feb 2020 07:50 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா்த் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி காந்தி நகரில் ஊராட்சி ஒன்றியக் குழு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் இயந்திரத்தை அமைச்சா் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தாா். இந்த இயந்திரத்தில் ரூ. 5 நாணயத்தை செலுத்தி பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ளலாம். மேலும், கவுந்தப்பாடி பகுதியில் 2 இடங்களில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். கவுந்தப்பாடிபுதூா், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கவுந்தப்பாடி அரசுப் போக்குவரத்து கழக பணிமனையின் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்று 75 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சேலைகள், மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர மிதிவண்டி ஆகியவற்றை வழங்கினாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT