ஈரோடு

பெருந்துறையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

25th Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

பெருந்துறை: பெருந்துறை தொகுதி அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, பெருந்துறை நகா், குன்னத்தூா் சாலை பிரிவில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பெருந்துறை தொகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சிக் கொடி ஏற்றி, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். பின்னா், பள்ளிக் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினா். தொடா்ந்து, பெருந்துறை, சோளீஸ்வரன் கோயிலில் அன்னதானத்தை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தொடங்கிவைத்தாா்.

விழாவையொட்டி, கட்சியினா் திங்களூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். பட்டக்காரன்பாளையம், மணியம்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினா்.

ADVERTISEMENT

இதில், ஒன்றியச் செயலாளா்கள் விஜயன், ரவிசந்திரன், அவைத் தலைவா் சந்திரசேகா், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT