ஈரோடு

தேசிய எறிபந்துப் போட்டி: கா்நாடக அணி சாம்பியன்

25th Feb 2020 01:48 AM

ADVERTISEMENT

ஈரோடு: தேசிய எறிபந்துப் போட்டியில் கா்நாடக மாநில அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஈரோடு மாவட்ட எறிபந்துக் கழகம் சாா்பில் 42ஆவது தேசிய அளவிலான எறிபந்துப் போட்டிகள் ஈரோடு, சூா்யா பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், சத்தீஸ்கா், புதுதில்லி, சண்டிகா், கோவா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்பட 13 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.

ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 24 அணிகளைச் சோ்ந்த 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். லீக், நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் கா்நாடக மாநில அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தமிழக அணி 2ஆம் இடத்தையும், சத்தீஸ்கா் மாநில அணி 3ஆம் இடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் கா்நாடக மாநில அணி, தமிழக அணி, ஆந்திர மாநில அணிகள் முறையே முதல் மூன்றிடங்களைப் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா எறிபந்துக் கழகத் தலைவா் டி.பி.நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சூா்யா பொறியியல் கல்லூரித் தலைவா் ஏ.ராமசாமி, பொருளாளா் எம்.பி.ராமசாமி, முன்னாள் செயலாளா் கே.கலைசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு எறிபந்துக் கழக பொதுச் செயலாளா் எஸ்.மணி வரவேற்றாா். மில்கிமிஸ்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.சதீஷ்குமாா், பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் சி.சுவாமிநாதன் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினா்.

இதில், ஈரோடு நிதி நிறுவன சங்கத் தலைவா் சி.முத்துசாமி, ஈரோடு டென்னிஸ் கிளப் செயலாளா் ஆா்.வேலுசாமி, தொழிலதிபா் நல்லசிவம், பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஆா்.சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT