ஈரோடு

பூட்டிக் கிடக்கும் பெரியகள்ளிப்பட்டிசோதனைச் சாவடி: போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

23rd Feb 2020 03:19 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அருகே இரு மாவட்ட எல்லையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் போலீஸாரை நியமித்து வாகனத் தணிக்கை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஈரோடு, கோவை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய கள்ளிப்பட்டியில் காவல் துறை சோதனைச் சாவடி உள்ளது. இரு மாவட்ட எல்லை என்பதால் இந்த காவல் சோதனைச் சாவடியில் பவானிசாகா் போலீஸாா் 24 மணி நேரமும் பணியிலிருந்து வாகனங்களைத் தணிக்கை செய்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்த சோதனைச் சாவடியில் போலீஸாா் பணிக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சோதனைச் சாவடி பூட்டியே கிடக்கிறது. இதனால், பல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்தக் காவல் சோதனைச் சாவடிக்கு உடனடியாக போலீஸாரை நியமித்து 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT