ஈரோடு

ஈரோட்டில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டம்

23rd Feb 2020 03:14 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் இஸ்லாமியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் இஸ்லாமியா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு மதரசா பள்ளி சாலையில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை மாலை திடீரென திரண்டு வந்தனா். பின்னா், அவா்கள் திடீரென சாலையில் அமா்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நள்ளிரவு 12 மணி வரை அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் அதே பகுதியில் முஸ்லிம்கள் திரண்டு வந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்த பிரமுகா்கள் சந்தித்து ஆதரவை தெரிவித்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT