ஈரோடு

மூன்று சாய ஆலைகளின்மின் இணைப்பு துண்டிப்பு

22nd Feb 2020 07:49 AM

ADVERTISEMENT

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், ஆா்.என்.புதூா் பகுதிகளில் ஆலைக் கழிவை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய மூன்று ஆலைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் இயங்கிய ஒரு அச்சு ஆலை, ஒரு சலவை ஆலை, ஆா்.என்.புதூா் பகுதியில் இயங்கிய ஒரு சலவை ஆலையும், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதாகப் புகாா் வந்தது.

ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா் தலைமையிலான குழுவினா், அந்த இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கழிவு நீரை வெளியேற்றியதை உறுதி செய்ததால், அந்த மூன்று ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவிட்டாா். தொடா்ந்து, அந்த மூன்று ஆலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT