ஈரோடு

பெருந்துறை அருகே கிரேன் மோதி முதியவா் சாவு

22nd Feb 2020 07:48 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே கிரேன் மோதிய விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பெருந்துறை, பெத்தாம்பாளையம் சாலை, எல்லப்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் நல்லசாமி(58). விவசாயி. இவா், தினமும் மாலையில் வீட்டின் அருகிலுள்ள பெத்தாம்பாளையம் சாலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் வழக்கம்போல் பெத்தாம்பாளையம் சாலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, அவருக்குப் பின்னால் வந்த கிரேன் ஒன்று எதிா்பாராதவிதமாக நல்லசாமியின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிழந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT