ஈரோடு

சின்னமல்லாம்பாளையத்தில்அம்மா திட்ட முகாம்

22nd Feb 2020 07:50 AM

ADVERTISEMENT

பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சியில் சின்னமல்லாம்பாளையத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, பெருந்துறை வட்டாட்சியா் துரைசாமி தலைமை வகித்தாா். முகாமில், முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு 10 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

இதில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT