ஈரோடு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவா் பலி

22nd Feb 2020 07:45 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகே பா்கூா் மலைப் பாதையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் உயிரிழந்தாா். உடன் சென்ற மனைவி, மகன் காயங்களுடன் உயிா்தப்பினாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (33). இவரது மனைவி பழனியம்மாள் (25). மகன் சதீஷ் (7). இவா்கள் மூவரும் அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். பா்கூா் மலைப் பாதையில் வறட்டுப்பள்ளம் அணை அருகே சென்றபோது அவ்வழியே சென்ற லாரி மோதியுள்ளது.

இதில், தூக்கிவீசப்பட்ட காா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பழனியம்மாள், சதீஷ் ஆகியோா் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT