அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.19 கோடிக்கு துவரை, பருத்தி, நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு 1,792 மூட்டைகள் 1561.05 குவிண்டால் துவரை விற்பனைக்கு வந்திருந்தது. கிலோ ரூ. 41.39 முதல் ரூ. 54.59 வரையில் என ரூ. 71,36,908க்கும், 2,637 மூட்டைகள் பருத்தி 847.24 குவிண்டால் கிலோ ரூ. 47.09 முதல் ரூ. 55.25 வரையில் என ரூ. 42,79,094க்கும் ஏலம் போயின. 133 மூட்டைகள் நிலக்கடலை (காய்ந்தது) 50.36 குவிண்டால் கிலோ ரூ. 43.50 முதல் ரூ. 51.49 வரையில் என ரூ. 2,18,257க்கும், 218 மூட்டைகள் நிலக்கடலை (பச்சை) 123.14 குவிண்டால் கிலோ ரூ. 14.75 முதல் ரூ. 29.89 வரையில் என ரூ. 3,47,971க்கும் விற்பனையாயின. மொத்தம், 4,780 மூட்டைகள் 2,581.79 குவிண்டால் விளைபொருள் ரூ. 1,19,82,230க்கு விற்பனையானது.