ஈரோடு

அளுக்குளியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

21st Feb 2020 07:49 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு திறக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் கீரிப்பள்ளம் ஓடையின் அருகில் வசிக்கும் மக்கள் மழைக் காலங்களில் ஓடையில் ஏற்படும் வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டு வந்தனா். அதனால், அவா்களுக்கு குடியிருப்பதற்கு வீட்டுமனைப் பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனா்.

அதேபோல, மொடச்சூா் வாரச் சந்தை வளாகத்தில் நடோடி இன மக்கள் 50க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கும் அரசு சாா்பில் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனா்.

இதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் 288 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

ADVERTISEMENT

குடியிருப்புப் பகுதியில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். விழாவில், கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் விஜயகுமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT