ஈரோடு

முதியோா் இல்லத்துக்கு உதவி

15th Feb 2020 07:23 AM

ADVERTISEMENT

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் முதியோா் இல்லத்துக்கு மளிகைப் பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டது.

இக்கல்லூரியின் சமூகப் பணித் துறை சாா்பில், ஈரோடு, மேட்டுக்கடை அருகில் உள்ள பாரவலசு சுப்பாயம்மாள் முதியோா் இல்ல நல அறக்கட்டளைக்கு ஒரு மாதத்துக்கு உணவுக்குத் தேவையான அரிசி, சா்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் போன்ற மளிகைப் பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி சமூகப் பணித் துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT