ஈரோடு

அந்தியூரில் ரூ. 1.23 கோடிக்கு விளைபொருள்கள் ஏலம்

13th Feb 2020 06:59 AM

ADVERTISEMENT

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் துவரை, பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருள்கள் ரூ. 1.23 கோடிக்கு விற்பனையாயின.

திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்த 1465.42 குவிண்டால் எடையுள்ள 1,663 மூட்டைகள் துவரை கிலோ ரூ. 44.01 முதல் ரூ. 53.11 வரையில் என மொத்தம் ரூ. 69,27,062க்கும், 1,034.94 குவிண்டால் எடையுள்ள 3,088 மூட்டைகள் பருத்தி கிலோ ரூ. 45.61 முதல் ரூ. 52.31 வரையில் என 51,21,560க்கும் ஏலம் போயின.

98 மூட்டைகள் நிலக்கடலை (காய்ந்தது) 42.29 குவிண்டால் கிலோ ரூ. 45.69 முதல் ரூ. 51 வரையில் என ரூ. 1,66,381க்கும், நிலக்கடலை (பச்சை) 80 மூட்டைகள் 44.55 குவிண்டால் கிலோ ரூ. 24.15 முதல் ரூ. 29 வரையில் என ரூ. 1,22,529க்கு ஏலம் போயின. மொத்தம் 4,929 மூட்டைகள் 2587.20 குவிண்டால் விளைபொருள்கள் ரூ. 1,23,37,532க்கு விற்பனையாயின என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் மஞ்சுளா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT