கோபி பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரியில் கணிதவியல் துறை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய பாா்வை இழப்பு தடுப்புத் திட்டம், ஈரோடு மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை, கோபி பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரி கணிதவியல் துறை ஆகியவை இணைந்து பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரியில் இம்முகாமை நடத்தினா்.
முகாமிற்கு, முருகன்புதூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 160 போ் புற நோயாளிகளாக வந்தனா். மருத்துவா் ஹரிகரசங்கா், செவிலியா்கள் கலந்துகொண்டு முகாமிற்கு வந்தவா்களுக்குப் பரிசோதனை செய்தனா்.
முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் பி.என்.வெங்கடாசலம், முதன்மைக் கல்வி அலுவலா் ஜெகதா லட்சுமணன், முதல்வா் மைதிலி, துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி, கணிதத் துறைத் தலைவா் பேராசிரியா் ஜெயலட்சுமி , துறைப் பேராசிரியா்கள், மாணவிகள் செய்திருந்தனா்.