ஈரோடு

சென்னிமலையை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்கக் கோரிக்கை

6th Feb 2020 07:56 AM

ADVERTISEMENT

சென்னிமலையை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவனிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:

பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெறவுள்ள நிலையில் ஈரோட்டில் மஞ்சள் வாரியம், ராசிபுரத்தில் மரவள்ளிக்கிழங்கு வாரியம் அமைக்க ஆட்சியா் பரிந்துரை செய்ய வேண்டும். சென்னிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டும். மொடக்குறிச்சி வட்டார வேளாண் விரிவாக்க மையம், கிடங்கு பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

லக்காபுரம் சுற்றுவட்டச் சாலையை விரைவில் பெருந்துறை சாலையுடன் இணைக்க வேண்டும். மொடக்குறிச்சி - நாமக்கல் புறவழிச்சாலை திட்ட வரைபடத்தை வெளியிட வேண்டும். பாசூா் கதவணை சாலைப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்துக்குத் திறந்துவிட வேண்டும். ஆனந்தம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை கிளை நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும். வங்கிகளில் விவசாய நகைக்கடன் மீதான 4 சதவீத சலுகை வட்டி திட்டம் தொடர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT