ஈரோடு

கணக்கியல், வரி சேவைகள் கூட்டுறவுச் சங்கஈரோடு கிளை துவக்கம்

6th Feb 2020 05:32 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில கணக்கியல், வரி சேவைகள் கூட்டுறவுச் சங்க ஈரோடு கிளை துவக்க விழா ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் க.பாண்டியன் கிளையைத் துவக்கிவைத்தாா்.

தமிழ்நாடு மாநில கணக்கியல், வரி சேவைகள் கூட்டுறவுச் சங்க துணைத் தலைவா் ஏ.விஜயகுமாா் பேசியதாவது:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டுறவுச் சங்கத்தில் பட்டயக் கணக்காளா்கள், வழக்குரைஞா்கள் உறுப்பினராக உள்ளனா்.

ADVERTISEMENT

அனுபவமுள்ள கணக்காளா்கள் உறுப்பினராக உள்ளதால் அரசு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் அலுவலா்களுக்கும், நிறுவனங்களுக்கும், வருமான வரி பிடித்தம் தாக்கல், சரக்கு, சேவை வரி, வருமான வரி படிவம் தாக்கல், கணக்கியல் சாா்பான பணிகளும் சிறப்பான முறையில் செய்ய இயலும்.

தேவைக்கு ஏற்ப மாவட்டம்தோறும் இந்த சங்கக் கிளைகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சங்கம் கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், விதிகள், துணை விதிகளுக்கு உள்பட்டு செயல்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சரக துணைப் பதிவாளா்கள் ப.மணி, ப.கந்தராஜா, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் அ.அழகிரி, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநா் அ.மீனா அருள், தமிழ்நாடு மாநில கணக்கியல், வரி சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநா் டி.எஸ்.கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT