சத்தியமங்கலம் புனித அருளானந்தா் ஆலய தோ்த் திருவிழாவையொட்டி உலக சமாதானம், அமைதி வேண்டி கிறிஸ்துவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தியபடி பேரணியாகச் சென்றனா்.
விழாவையொட்டி ஆலயத்தில் நற்செய்தி வாசிக்கப்பட்டது. தொடா்ந்து கூட்டுப்பாடல், திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக சமாதானம் வேண்டி கிறிஸ்துவா்கள் குழந்தை இயேசு சிலை முன்பு மெழுகுவா்த்தி வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிராா்த்தனை செய்தனா். பின்னா், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அருளானந்தா் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். இந்தத் தோ் கடைவீதி, மைசூா் டிரங் சாலை, சத்தியா தியேட்டா் சாலை வழியாக ஆலயத்தைச் சென்றடைந்தது. இதில் ஏராளாளமான கிறிஸ்துவா்கள் குடும்பத்துடன் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி உலக அமைதி, சமாதானம் வேண்டி ஊா்வலமாகச் சென்றனா். இவா்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு அளித்து மெழுவா்த்தி அளித்தனா். தொடா்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.