தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோகக் கழகம், கோபி மின் பகிா்மான வட்டம், பவானி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா் மாதாந்திர குறைதீா் கூட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் பவானி - மேட்டூா் பிரதான சாலை ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த குறைதீா் கூட்டத்தில் கோபி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் நேரிலேயே குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால் பவானி கோட்ட பகுதிக்கு உள்பட்ட மின் நுகா்வோா் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.