அண்ணா நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா வளாகத்தில் ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அண்ணா நினைவு தின நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். பகுதி செயலாளா்கள் கே.சி.பழனிசாமி, மனோகரன், ஜெகதீஷ், கேசவமூா்த்தி, முருகுசேகா், கோவிந்தராஜ், மாணவா் அணி மாவட்டச் செயலாளா் ரத்தன்பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதேபோல, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அண்ணா நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா், மாவட்டப் பொருளாளா் பி.கே.பழனிசாமி, துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாநகரச் செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திராவிடா் கழகம் சாா்பிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.