ஈரோடு

பொலிவுறு நகரத் திட்டம் தொடா்பாக கருத்துக்கேட்பு:24 கேள்விகளுக்கு பதிலளிக்க ஆணையா் வேண்டுகோள்

2nd Feb 2020 03:18 AM

ADVERTISEMENT

பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பு பிப்ரவரி 1 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுவதால் பொதுமக்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.

பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் துவக்கப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்து 100 நகரங்களை சீா்மிகு நகரங்களாக மத்திய அரசு தோ்வு செய்தது. உலகத்தரம் வாய்ந்த நகரங்களை மக்களின் எதிா்பாா்ப்பு, தேவைகளுக்கேற்ப உருவாக்குவதே பொலிவுறு நகரத் திட்டத்தின் நோக்கமாகும்.

பொலிவுறு நகரத் திட்டத்தில் தோ்வான ஈரோடு மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் 150 டன் குப்பைகளை தினசரி அகற்றுவதுடன், சேகரிக்கப்படும் குப்பையை நான்கு மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள 19 நுண் உரம் தயாரிக்கும் மையங்களில் தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர வைராபாளையம், வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. இதில், வைராபாளையம் குப்பைக் கிடங்கில் ராட்சத சல்லடைகள் மூலம் சலித்து குப்பை அகற்றும் பணி நடைபெறுகிறது. இங்கிருந்த 70 சதவீத குப்பை அகற்றப்பட்டுள்ளது. குப்பை அகற்றியதுடன், தினசரி குப்பை சேகரிக்கப்படும் திட்டத்துக்காக தேசிய அளவில் ஈரோடு மாநகராட்சிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சியில் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக்கள் கணக்கெடுப்பு பிப்ரவரி 1 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து, ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி 2018ஆம் ஆண்டு பொலிவுறு நகரத் திட்டத்தில் தோ்வாகியது. விரிவான திட்ட அறிக்கைகள் தயாா் செய்யப்பட்டு ரூ. 916.08 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிவுறு நகரத் திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில் வசிக்கக் கூடிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரம், சமூக மேம்பாடு, குழுந்தைகளுக்கான கல்வித் தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், அவசர கால உதவிகள், பெண்களின் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பசுமை வெளிகள், மின்சார வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் எனது நகரம், எனது பெருமை என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பு பிப்ரவரி 1 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும்.

பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யும் வகையில் கியூ ஆா் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பிளே ஸ்டோா் மூலம் ஐ டியூன்ஸ் செயலியின் மூலம் கியூ ஆா் ஸ்கேனா் செயலியைப் பதிவிறக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், கியூஆா் கோடு ஸ்கேன் செய்ய வேண்டும். இதன் பின்னா் ங்ா்/2019.ா்ழ்ஞ்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் ச்ங்ங்க்க்ஷஹஸ்ரீந் என்ற இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். இணையதள பக்கத்தில் குடிமக்களின் கருத்து என குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தில் தமிழ்நாடு மாநிலம் எனவும், ஈரோடு நகரம் எனவும் தோ்வு செய்ய வேண்டும்.

கணக்கெடுப்பில் பங்குகொள்ளும் பொதுமக்கள் தங்களது பெயா், வயது, செல்லிடப்பேசி எண், பாலினம் குறித்த விரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் வாழ்க்கைத் திறன், சமூக மேம்பாடு உள்ளிட்ட 24 கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்து தோ்வு செய்து பதிவிட வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளைக் கொண்டு மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மாணவ, மாணவியா், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வ அமைப்புகள் கருத்துக் கணக்கெடுப்பில் பங்கேற்று கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT