ஈரோடு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பவானிசாகா் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும் பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

2nd Feb 2020 11:47 PM

ADVERTISEMENT

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் இளநிலை உதவியாளரை டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்ாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகரில் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. பணியாளா் நலன் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் இந்தப் பயிற்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இங்கு பயிற்சி பெற்றுவரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடா்பாக இரு தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸாா் பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்துக்கு சென்று சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து சென்ாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவா் எப்போது டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதி தோ்வானாா், விழுப்புரம் மாவட்டத்தில் எந்தத் துறையில், எந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா் என்பது குறித்த தகவல்களை அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT