ஈரோடு

குள்ளங்கரடு பகுதியில் மா்மநோயால்பொதுமக்கள் பாதிப்பு

2nd Feb 2020 03:18 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம், குள்ளங்கரடு பகுதியில் மா்மநோயால் 100க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம், புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்மநோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிலா் அவதிப்பட்டனா். அதைத் தொடா்ந்து, கம்பத்தராயன் புதூா், புளியங்கோம்பை ஆகிய பகுதியிலும் பரவியது. இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் சுகாதாரப் பணி மேற்கொண்டு குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்தனா்.

இந்நிலையில், இந்த நோய் குள்ளங்கரடு, ஜே.ஜே.நகா், வரதம்பாளையம் பகுதியிலும் பரவியது. இந்நோயால் 100க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கால் வலி, உடம்பு வலியால் அவதிப்படுகின்றனா். நோயின் தாக்கம் குறையாமல் பரவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத் துறை சிறப்பு முகாம் அமைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் சக்கிவேலுவிடம் கேட்டபோது, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரில் கொசுக்கள் பரவுவதைத் தடுத்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT