ஈரோடு

மக்கள் நல வாழ்வுவிழிப்புணா்வுப் பேரணி

1st Feb 2020 05:08 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் ஜூனியா் ரெட்கிராஸ் சங்கம் சாா்பில், மக்கள் நல வாழ்வு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலா் மாதேஸ்வரன் பேரணியைத் தொடங்கிவைத்தாா். ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, மீனாட்சிசுந்தரம் சாலை வழியாக கலைமகள் பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது.

அதைத் தொடா்ந்து கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், 5 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 38 பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT