ஈரோடு

சென்னிமலை ஸ்ரீ ஞான சாய்பாபாகோயில் கும்பாபிஷேகம்

1st Feb 2020 05:13 AM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே புதியதாக கட்டிய ஸ்ரீ ஞானசாயி உலக சமாதான ஆலயம், சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை, முகாசிபிடாரியூா், ஜெம் காா்டனில், பிடாரியூா் ஈஸ்வரன் கோயில் அருகில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ரியான் அறக்கட்டளை சாா்பில், இரண்டு கோடி ரூபாய் செலவில் சீரடி சாய்பாபா கோயில், ஸ்ரீ ஞான சாயி உலக சமாதான ஆலயம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இதன் கும்பாபிஷேக விழா ஜனவரி 27ஆம் தேதி துவங்கியது. வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு சீரடி சாய்பாபா சிலை, தத்தாதிரேயா், விநாயகா் சிலைகளை கருவறையில் பிரதிஷ்டை செய்தனா். பின்னா், சீரடி சாய்பாபா கோயிலில் இருந்து வந்த குருக்கள், சென்னிமலை முருகன் கோயில் நடராஜ சிவாச்சாரியாா் தலைமையில், 22 சிவாச்சாரியாா்கள் யாக பூஜைகளை செய்து கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனா். தொடா்ந்து, பாபாவுக்கு ராஜ அலங்காரம் செய்து ஆரத்தி எடுக்கப்பட்டது.

இதில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் தென்னரசு, காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் தனியரசு உள்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ரியான் சமாதான அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT