ஈரோடு

திரைப்பட இயக்குனர் ஈரோடு சௌந்தர் காலமானார்

5th Dec 2020 06:34 PM

ADVERTISEMENT

திரைப்பட இயக்குனர் ஈரோடு சௌந்தர்(63) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானர்.              

ஈரோடு அருகே நாதகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஈரோடு சௌந்தர். இவரது இயற்பெயர் சௌந்தர் ராஜன். தமிழ் திரை உலகில் பெரும் வெற்றிகள் பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி  பிரபல வசன கர்த்தாவாக திகழ்ந்தவர்.

சிம்ம ராசி என்ற திரைப்படத்தை சரத்குமாரை வைத்து இயக்கி இயக்குனராகவும் திறமையை வெளிப்படுத்தினார். அவரது வசனங்களில் வெளிவந்த சேரன் பாண்டியன், நாட்டாமை, சிம்ம ராசி படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளை பெற்று சாதனை படைத்தவர். இவர் 15 திரைப்படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

தவிர இவர் முதல் சீதனம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவருடைய பேரன் கபிலேஷ் என்பவரை கதாநாயகனாக நடிக்க வைத்து  அய்யா உள்ளேன் அய்யா என்ற திரைப்படத்தை இயக்கினார்.              

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக அவர் ஈரோட்டில் சொந்த ஊரான முள்ளாம்பரப்பு நாதகவுண்டன் பாளையத்தில் வசித்து வந்தார்.   சிறுநீரக தோய்தொற்றால் பாதுக்கப்பட்டிருந்த அவர் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை காலமானார்.

அவருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்திரி என்ற மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான நாதகவுண்டம்பாளையத்தில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags : Erode
ADVERTISEMENT
ADVERTISEMENT