ஈரோடு

கரோனா: தாளவாடியில்தமிழக - கா்நாடக எல்லை மீண்டும் மூடல்

26th Aug 2020 05:42 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தாளவாடியில் தமிழக - கா்நாடக எல்லைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள தாளவாடியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 27 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மருத்துவா், செவிலியருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, வட்டாட்சியா் அலுவலகப் பெண் ஊழியா் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது. கடந்த மாதம் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகள் மூடப்பட்டதால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மலைக் கிராமமான தாளவாடியில் வேகமாகப் பரவி வரும் கரோனாவால் மாநில எல்லைச் சாலைகள் மீண்டும் அடைக்கப்பட்டன.

தாளவாடியில் இருந்து ஒசூா் செல்லும் சாலை, தலமலை செல்லும் சாலையை அதிகாரிகள் தகரம் வைத்து அடைத்தனா். தாளவாடி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், 50 பேருக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT