ஈரோடு

தோட்டத்தில் பிடிபட்ட மரநாய்க்குட்டி

21st Aug 2020 06:34 AM

ADVERTISEMENT

அவல்பூந்துறை அருகே விவசாயி தோட்டத்தில் பிடிபட்ட மரநாய்க்குட்டி காப்புக்காட்டில் விடப்பட்டது.

அவல்பூந்துறையை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் குட்டக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65), விவசாயி. இவரது தோட்டத்தில் சோளத்தட்டு அறுக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, தென்னை மரத்தில் இருந்து மரநாய்க் குட்டி விழுந்துள்ளது.

இதையடுத்து, அந்த மரநாய்க்குட்டியை அறச்சலூா் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, அக்குட்டி காப்புக்காட்டில் விடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

ராட்டைசுற்றிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிறைய தோட்டங்களில் பெரிய மரநாய்கள் வசிக்கின்றன. இவை தென்னை மரத்தில் உள்ள தேங்காய்கள், பாலைகளை அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன. இந்த மரநாய்களை வனத் துறையினா் பிடித்து வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT