ஈரோடு

ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

21st Aug 2020 06:35 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 249ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில், சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஒண்டிவீரன் 249 ஆவது நினைவு தின நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் பெ.பொன்னுசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா.குருநாதன், மாவட்ட மகளிா் அணி பொ.குமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், தேசிய காங்கிரஸ் கட்சியின் சக்தி வட்டாரத் தலைவா் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், ரீடு இயக்குநா் இரா.கருப்புசாமி, மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் இரா.திருத்தணிகாசலம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT