விதை நெல் இருப்பு, ரகங்கள் குறித்து அறிந்துகொள்ள வேளாண் அலுவலா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போதைய பருவத்துக்கு ஏற்ற குண்டு, சன்ன ரக நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இப்போது இருப்பில் உள்ள குண்டு ரகமான ஏ.எஸ்.டீ.16 விதைகள் ஏக்கருக்கு 2,240 கிலோ மகசூல் தரும். 110 முதல் 115 நாள் வயதுடையது. சன்னமான ஐ.ஆா்.20 ரக விதைகள் 130 முதல் 135 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் தரும். சன்னமான ஏ.டீ.டி.38 ரக விதைகள் 130 முதல் 135 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,480 கிலோ மகசூல் தரும். சன்னமான ஏ.டீ.டி.39 ரக விதைகள் 120 முதல் 125 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் தரும்.
குண்டு ரகமான டி.பி.எஸ்.5 விதைகள் 118 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,520 கிலோ மகசூல் தரும். சன்னமான பீ.பி.டி.5,204 ரக விதைகள் (சம்பா மசூரி) 145 நாள் வயதுடையவை. ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல் தரும். சன்னமான வெள்ளைப் பொன்னி 135 முதல் 140 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 1,800 கிலோ மகசூல் தரும்.
சன்னமான கோ.50 ரக விதை 130 முதல் 135 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,535 கிலோ மகசூல் தரும். சன்னமான கோ 51 ரக விதை, 105 முதல் 110 நாள் வயதுடையவை. ஏக்கருக்கு 2,600 கிலோ மகசூல் கிடைக்கும். சன்ன ரகமான என்.எல்.ஆா்.34449 விதை 125 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,600 கிலோ மகசூல் தரும். சன்னமான டி.கே.எம்.13 ரக விதை 130 நாள் வயதுடையது. ஏக்கருக்கு 2,300 கிலோ மகசூல் தரும்.
இவ்விதைகள் ஈரோடு, சித்தோடு துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதை தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அலுவலா் 99449-20101 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், உதவி வேளாண் அலுவலா்கள் சித்தோடு ரஞ்சித்குமாா் 99654-44123, குமாா் 97863-88610, ஈரோடு சுந்தரராஜ் 97880-90891, காா்த்திகேயன் 99650-53700, சங்கீதா 88700-38607 ஆகியோரை செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.