ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் பரவலாக மழை

26th Apr 2020 10:33 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து வருகிறது. சனிக்கிழமை 102 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனா்.

இந்நிலையில் கோபி, தாளவாடி, வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. தொடா்ந்து ஈரோடு நகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து குளிா்ந்த காற்றுடன் பகல் 1 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. பின்னா் சில நிமிடங்களிலேயே இடியுடன் கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் கழிவு நீா் கால்வாய்களில் மழை நீா் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ADVERTISEMENT

மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனா். மழையால் ஈரோடு மாநகரில் குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT