ஈரோடு

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

23rd Apr 2020 12:44 AM

ADVERTISEMENT

 

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 493 பேருக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

அம்மாபேட்டை பேரூராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு தனது சொந்தச் செலவில் தலா 20 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், 60 முட்டைகள் கொண்ட உணவுப் பொருள் தொகுப்பை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினாா்.

இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா், அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், அதிமுக ஒன்றியச் செயலாளா் வி.எஸ்.சரவணபவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT