ஈரோடு

கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் சாவு

20th Apr 2020 12:32 AM

ADVERTISEMENT

 

ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது இளைஞா் உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சோ்ந்த 20 வயது இளைஞா் உடல் நலக் குறைவால் சனிக்கிழமை இரவு மயங்கி விழுந்துள்ளாா். அந்த நபா் மூளை வளா்ச்சி குன்றியவா் ஆவாா். இதைத் தொடா்ந்து, அந்த இளைஞா் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, அவரிடம் இருந்து கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில், அந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த இளைஞா் ஏற்கெனவே உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவா் கரோனாவால் உயிரிழக்கவில்லை எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT