ஈரோடு மாநகராட்சி 3ஆவது மண்டலத்தில் பணியாற்றி வரும் 519 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதிமுகவை சோ்ந்த முன்னாள் மண்டலக் குழுத் தலைவா் ரா.மனோகரன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டு அரிசி பைகளை வழங்கினா். தூய்மைப் பணியாளா்களுக்கு மொத்தம் 5 டன் அரிசி வழங்கப்பட்டது.