ஈரோடு

பிரதமா் நிவாரண நிதிக்கு ஓய்வூதியத்தை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ

20th Apr 2020 11:51 PM

ADVERTISEMENT

 

பிரதமரின் நிவாரண நிதிக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான கே.வி.ராமநாதன், தனது ஒரு மாத ஓய்வூதியத்தை அளித்துள்ளாா்.

பவானி சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கே.வி.ராமநாதன். தற்போது பாஜகவில் மாநிலத் துணைத் தலைவா் (ஓபிசி அணி) பொறுப்பு வகித்து வருகிறாா். இவா், கரோனா நோய் பரவலைத் தொடா்ந்து பாரதப் பிரதமா் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு உதவியாக, முன்னாள் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் தனது ஒரு மாத ஓய்வூதியமான ரூ.20 ஆயிரத்தை வழங்கியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT