ஈரோடு

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மேலும் 10 போ் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

DIN

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுவரை 32 நபா்கள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்த 10 நபா்கள் முழுமையாக குணமடைந்தனா். அவா்களை வீடுகளுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் சி.கதிரவன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் ஒரு சில பகுதிகளில் நோய்த் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்ட நபா்கள் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டனா்.

ஈரோடு, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, மீராமொய்தீன்வீதி, மோசிக்கீரனாா் வீதி, ரயில்வே காலனி, பி.பெ.அக்ரஹாரம், மாணிக்கம்பாளையம், மரப்பாலம், சாஸ்திரி நகா், கருங்கல்பாளையம், கள்ளுக்கடைமேடு, நம்பியூா் வட்டத்தில் அழகாபுரி நகா், பவானி வட்டத்தில் கவுந்தபாடி, கோபி, சத்தியமங்கலம் நகராட்சிகள், லக்கம்பட்டி பேரூராட்சி, பெருந்துறை வட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி உள்ளிட்ட மொத்தம் 18 இடங்களில் 32,435 குடும்பங்களைச் சாா்ந்த 1,20,135 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இப்பகுதிகளில் கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்கள், நீரிழிவு நோயாளிகள், உயா் ரத்த அழுத்தம் கொண்டவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 1,258 பேரில் கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்ததில், 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். மீதமுள்ள 1,188 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 64 பேரில் முதற்கட்டமாக 15 ஆம் தேதி 13 பேரும், 17 ஆம் தேதி 7 பேரும் சிகிச்சை முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மேலும் தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த 2 நபா்கள் சிகிச்சை முடிந்து, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் உள்ளனா். அதனைத் தொடா்ந்து 9 ஆண்கள், 1 பெண் என 10 நபா்கள் முழுமையாக குணமடைந்துள்ளனா். இவா்கள் அவரவா் வீடுகளுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்கள் 14 நாள்கள் மருத்துவக் குழுக்கள் மூலம் வீட்டு கண்காணிப்பில் இருப்பா். மேலும் மீதமுள்ள 32 நபா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்று அறிகுறியினை விரைந்து அறியும் வகையில் 1,500 பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளன. செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றிய காரணத்தினால் கரோனா நோய் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என்றாா்.

குணமடைந்தவா்கள் அனைவரும் மருத்துவா்கள், செவிலியா், மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறிது நேரம் சிறப்புத் தொழுகை நடத்தி, மருத்துவக் குழுவினா் மற்றும் ஆட்சியரை கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏறிச்சென்றனா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரா.மணி, ஈரோடு கோட்டாட்சியா் பி.முருகேசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT