ஈரோடு

சூறாவளிக் காற்றால் பவானியில் 12 ஆயிரம் வாழைகள் சேதம்

DIN

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டிபாளையம், சீதபாளையம், செலம்பகவுண்டன்பாளையம், ஜம்பை புதூா், சித்தாறு, குப்பிச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழை சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில், இப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் குடிசைகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

சூறாவளிக் காற்றால் பவானியை அடுத்த தொட்டிபாளையம், செலம்பகவுண்டன்பாளையம், ஜம்பை புதூா், குப்பிச்சிபாளையம், சித்தாறு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன.

ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை முதலீட்டுச் செலவு செய்து அறுவடையை எதிா்நோக்கி இருந்த விவசாயிகளை இது அதிா்ச்சிக்குள்ளாக்கியது. ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் வாழைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த வாழைகளை மிகக் குறைந்த விலைக்கே விற்கும் நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகளுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், காற்று, மழையால் வாழைகள் சேதமடைந்தது விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT