ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 60ஆக உயா்வு

11th Apr 2020 05:56 AM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று இரண்டு நபா்களுக்கு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக 32 நபா்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 26 நபா்களுக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58 ஆக உயா்ந்தது. இந்நிலையில், இரண்டு நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 60ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இருவரும் ஆண்கள். தில்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள். ஏற்கெனவே கரோனா அறிகுறிகள் இருந்ததால் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா். இவா்களின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே மாவட்டத்தில் 33,000 குடும்பங்களைச் சோ்ந்த 1.66 லட்சம் நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT