ஈரோடு

பவானி அருகே மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதலைமையாசிரியை உள்பட இருவா் கைது

7th Apr 2020 03:04 AM

ADVERTISEMENT

பவானி: பவானி அருகே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தலைமையாசிரியை உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பவானி அருகேயுள்ள குறிச்சி, வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மனைவி ராணி (42). இவா், அம்மாபேட்டை அருகேயுள்ள செல்லிக்கவுண்டனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் சுப்பிரமணி (56). இவா்களுடன் சோ்த்து 7 போ் சரக்கு வாகனத்தில் பவானியை அடுத்த குரும்பபாளையம் காலனிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் கூட்டமாக வந்ததால், வாகனத்தைச் சிறைப்பிடித்ததோடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பவானி போலீஸாா் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதப் பிரசாரம் செய்ததாக ராணி, சுப்பிரமணியைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT