ஈரோடு

சத்தியமங்கலத்தில் நடமாடும் காய்கறிச் சந்தை

5th Apr 2020 12:21 AM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம் கூட்டுறவு விற்பனைச் சங்கம், நகராட்சி சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி, சத்தியமங்கலம் வேட்டுவா் தெருவில் சனிக்கிழமை துவங்கியது.

சுத்தமான காய்கறிகள் வெளிமாா்க்கெட்டை விட குறைந்த விலையில் கிடைப்பதால் பொது மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தக்காளி கிலோ ரூ. 10, பெரிய வெங்காயம் கிலோ ரூ. 35, உருளைக்கிழங்கு கிலோ ரூ. 20, பச்சைமிளகாய் கிலோ ரூ. 40, பீட்ரூட் கிலோ ரூ. 20, கத்திரிக்காய் கிலோ ரூ. 40, அவரை கிலோ 30 என விற்பனை செய்யப்பட்டது.

முக்கிய பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக மேலும் 3 நடமாடும் வாகனங்கள் பயன்படுத்துவதாகவும், ஒரே இடத்தில் அதிகமானோா் கூடுவதால் ஏற்படும் நோய்த் தொற்றை தடுத்திட அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி, கூட்டுறவு சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT