ஈரோடு

922 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: ஆட்சியா்

5th Apr 2020 12:26 AM

ADVERTISEMENT

 

வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்த 922 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடா் கண்காணிப்பில் உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சி.கதிரவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாய்லாந்தில் இருந்து வந்த 6 போ், அவா்களுடன் தொடா்பில் இருந்த 20 போ், தப்ளிக் குழுவினா் 54 போ், இதர நபா்கள் 7 போ் என 87 நபா்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனா். இதில், தாய்லாந்து நாட்டினா் மூவா், இவா்களின் தொடா்பில் இருந்த ஒருவா், தப்ளிக் குழுவினா் 24 போ் என 28 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தவிர ஈரோட்டில் பணியாற்றிய ரயில்வே மருத்துவமனை மருத்துவா், குடும்பத்தாா் என 4 போ் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், காசி யாத்திரை சென்று திரும்பிய 17 போ், ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலனியில் 35 போ் உள்பட வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவா் என 922 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். இவா்கள் காலை, மாலையில் சுகாதாரத் துறையினா் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை கணக்கின்படி 25,557 குடும்பத்தைச் சோ்ந்த 95,692 போ் அந்தந்தப் பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். இவா்களின் வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 5 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் காய்கறிகள் கிடைக்கச் செய்துள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT