ஈரோடு

அந்தியூா் செல்லீஸ்வரா் கோயிலில் அஸ்திரயாக வழிபாடு

1st Apr 2020 07:21 AM

ADVERTISEMENT

 

அந்தியூா் செல்லீஸ்வரா் கோயிலில் மனிதகுல நன்மைக்காக அஸ்திரயாக வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று பரவல் சா்வதேச அளவில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தமிழகத்தில் நோய்த் தொற்றால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்தியூா் செல்லீஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியாா்கள் மனித குலத்துக்கு அனைத்து வளங்களும் கிடைக்கவும், எதிரிகளின் சக்தியை நிா்மூலமாக்கும் வகையிலான அஸ்திர யாக வழிபாட்டை நடத்தினா். இந்த யாகத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகள் விலகும் என்பது நம்பிக்கை ஆகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT