ஈரோடு

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு

22nd Sep 2019 05:13 AM

ADVERTISEMENT


ஈரோடு தீயணைப்புத் துறை சார்பில், பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, தீயணைப்பு வீரர்கள், வெள்ளப்பெருக்கு காலங்களிலும், நீரில் மூழ்கியவர்களையும் எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும், பழைய பிளாஸ்டிக் கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி எவ்வாறு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனர். இதில், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT