ஈரோடு

பெருந்துறையில் ரூ. 2.75 கோடிக்கு கொப்பரை ஏலம்

22nd Sep 2019 05:15 AM

ADVERTISEMENT


பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2 கோடியே 75 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.                  
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 5,990 மூட்டைகளில், 2 லட்சத்து 85 ஆயிரம்  கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு 
வந்திருந்தனர்.                              
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 101.10 க்கும், அதிகபட்சமாக ரூ.   106.30 க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 37.70 க்கும், அதிகபட்சமாக ரூ. 100.25 க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 2 கோடியே 75 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT