பள்ளிக் கல்வித் துறை சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி பிரப் சாலை வழியாகச் சென்று கலைமகள் கல்வி நிலைய பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
இதில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.