ஈரோடு

நல்லகவுண்டம்பாளையத்தில் செப்டம்பர் 24 இல் மின்தடை

22nd Sep 2019 05:15 AM

ADVERTISEMENT


ஒருங்கிணைந்த மின் திட்ட மேம்பாட்டுப் பணிக்காக மின் கட்டமைப்பை வழு சேர்க்கும் விதமாக புதிய மின்பாதை அமைப்பதற்காகவும், அதற்குரிய மின் சாதனங்களை நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நிறுவுவதற்காகவும் கீழ்க்கண்ட பகுதிகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரையும்,  பின்னர் மாலை 3 முதல் 5 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ல.கள்ளிப்பட்டி, தமிழ்நகர், மின்நகர், வாய்க்கால் சாலை, செல்லப்பாநகர், கிருஷ்ணாநகர், நாகர்பாளையம், கரட்டடிபாளையம், லக்கம்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், பெரியார் திடல்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT